இருவினை சேரா இறைவன் - 2
அவர்களது உரையாடல் தொடர்கிறது….
(அன்று மாட்டு பொங்கல். மாலை நேரம். அந்த ஆசிரியர் எதோ எழுதிக் கொண்டியிருக்கிறார்)
மாணவன்: ஐயா, பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
ஆசிரியர்: பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி. பார்த்து நிறைய நாள்கள் ஆகிவிட்டது இல்லையா?
மாணவன்: ஆமாம் ஐயா. அன்றொரு நாள் இருவினைப் பற்றி தாங்கள் கூறியிருந்தீர்கள்? இல்லையா? அந்த கருத்தைப் பற்றி என் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் அதற்கு எதிர்வினையாக சில கேள்விகள் கேட்கிறார்கள்?
ஆசிரியர்: எதிர்வினை இல்லையென்றால் தெளிவுக் கிடைக்காது தம்பி. ஒரு கருத்தை எல்லா தளத்திலிருந்தும் புரிந்துக் கொள்ள அவை உதவும். புரிதல் வசப்படும். ஒவ்வொன்றாக கேள் என்னால் முடிந்தவரை விடைக் காண முயல்கிறேன்!
மாணவன்: ஐயா,
“இருள்சேர் இருவினை சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”
இந்த குறளுக்கு பரிமேலழகர் உரை இவ்வாறு சொல்கிறது.
“இருள் சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.
விரிவுரையில்,
இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின், அவிச்சையை “இருள்” என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையார் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே ‘பொருள்சேர் புகழ்’ எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்.
மணக்குடவரும் இக்குறளுக்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்.
“மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை, தீவினையென்னுமிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிக் சொற்களைப் பொருந்தினர் மாட்டு".
இவ்விரண்டு உரைகளும் ஒரே பொருளை தருவதாக நான் கருதுகிறேன் ஐயா. தாங்கள் விளக்க முடியுமா?
ஆசிரியர்: நன்று தம்பி. எல்லோர் உரையும் படித்திருக்கிறாய் போலியிருக்கிறது. இந்த குறள் என்றில்லை, கடவுள் வாழ்த்தில் உள்ள மற்ற குறளும் எல்லாருக்கும் மயக்கமே தருகிறது.
கடவுள் வாழ்த்தில் உள்ள பத்துக் குறள்களில் கடவுளை நேரடையாக விளிக்கும் சொற்றொடர்களை முதலில்ப் பார்ப்போம்.
1.ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. வேண்டுதல் வேண்டாமை இலான்
5. பொறிவாயில் ஐந்தவித்தான்
6. தனக்குவமை இல்லாதான்
7. அறவாழி அந்தணன்
8. எண்குணத்தான்
மற்ற இரு குறள்களிலும் பொதுவாக இறைவன் என்றேக் கூறப்படுகிறது!
மாணவன்: (குறிக்கிட்டு) ஏன் சொற்றொடர்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்? முழுக் குறளையும் எடுத்துக் கொண்டு ஆராயலாமே, ஐயா?
ஆசிரியர்: பொறுமை தம்பி! முழுக் குறளையும் ஆராய்வோம். நான் சொல்வதைக் கேள். பிறகு உன் கேள்விகளை கேள்? சரியா!
மாணவன்: சரி ஐயா! தாங்கள் தொடருங்கள்.
ஆசிரியர்: எந்த ஒரு நூலாசிரியரும் தான் வழிப்படும் கடவுளைரைத் தான் பாடுவாரேயன்றி, ஒரு பாட்டில் தன் சமயக் கடவுளையும், மற்ற பாட்டுகளில் மற்ற சமயக் கடவுளரை பாடியதாக எங்ஙனமும் அமையவில்லை. அதனால் கடவுள் வாழ்த்தில் கூறப்படுபவர் எந்தக் கடவுள் என்று அந்த சொற்றொடர்களை ஆராய்ந்து, பின் முழுக் குறளையும் பார்க்கலாம்.
அந்தச் சொற்றொடர்களை ஆயும் முன்னர், தமிழ்த் தென்றல். திரு.வி.க அவர்களின் கூற்றை சிறிதுப் படித்துவிட்டு மேற்செல்லலாம். என்னை?
”ஒவ்வொன்றற்கும் புறமும் அகமும் இருத்தல்போலச் சமயத்துக்கும் புறமும் அகமும் இருக்கின்றன. சமயத்தின் புறத்தை நோக்கும்[போது பன்மைக் காட்சியும், அதன் அகத்தை யுணரும்போது ஒருமையுணர்வுந் தோன்றும். புறப் பன்மையைச் சமயவாதிகள் சமயங்கொண்டு கலாம் விளைக்கிறார்கள்”
இங்கே புறம் என்பதை புறச்சான்றுகள் (External Evidences) என்றும் அகம் என்பதை தத்துவம் (Philosophy) என்றும் எடுத்துக் கொள்ளலாம்.புறச் சான்றுகள் என்ற வகையில், எல்லா சமயங்களுக்கும் (பெளத்தம், சைவம், வைணவம்) பொதுமையுண்டு. இதை வைத்து நாம் எல்லோரும் வாதம், பிரதிவாதம் செய்கிறோம். ஆனால் அகத்தை உணரும்போதுதான் சமயங்களின் ஒருமைத் தன்மை வெளித் தெரிகிறது. இந்தியச் சமயங்களில் புறத் தன்மைகள் ஒன்றுபோலவே அமையும். ஆனால், அவற்றின் அகத் தன்மையில் அவைகள் மாறுப்பட்டேயிருக்கும். காட்டாக, வினைக் கொள்கைகள் எல்லா இந்தியச் சமயங்களுக்கும் பொதுவேயாயினும் அவை சமணத்திற்கே உரிய சிறப்புக் கோட்பாடு.
புறத்தன்மையை (External Evidences) எடுத்துக் கொண்டாலும் சமண இலக்கியங்களில்தான் மேற்சொன்ன சொற்றோடர்கள் 3:1 என்ற விகிதத்தில் அவைகள் விரவி வருகின்றன. அவ்வகையில் பார்த்தாலும் அவைகள் சமணம் சார்ந்தேயிருக்கின்றன என்பது அங்ஙகை நெல்லிக் கனி.
அகத்தன்மைக்குள் புகும் முன் தமிழ்த் தென்றல். திரு.வி.க அவர்கள் சொல்வதைப் பார்த்துவிட்டு முன் செல்வோம்.
”திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஒரிடத்தில் ஒரு திறவு வைத்துள்ளார். அதற்கு அரணாக நூலினுள் பல குறிப்புக்களுண்டு. “பொறிவாயில் ஐந்தவித்தான்:” என்பது அத்திறவு. அத்திறவு கொண்டு கடவுள் வாழ்த்தைத் திறந்து பார்த்தல் வேண்டும்.
பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது ஒருபோது பொறி வாயில் ஐந்துடையானைக் குறித்தல் வெள்ளிடைமலை. முதலில் பொறி வாயில் ஐந்துடையனாயிருந்து, பின்னை அவ்வைந்தவித்த ஒருவனைத் திருவள்ளுவர் “ஆதிபகவன்” என்று போற்றியிருக்கிறாரென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குவ தொன்று. பொறி வாயில் ஐந்துடையனாய்ப் பின்னை அவ்வைந்தவித்த ஒருவனை ஆதிபகவனாகப் போற்றுவது எச்சமயம்?
எங்கும் நீக்கமற நிறைந்து அசைவற்ற ஒன்றை ஜைநம் மறுக்கின்றதில்லை. அவ்வசைவற்ற ஒன்று ஐந்தொழில் புரியா தென்பது ஜைந சித்தாந்தம். “உற்பத்தியு நாசமும் ஒன்றுமில்லாத பரஞ்சுடரே” என்பது ஜைநர் திருநூற்றந்தாதி.
எங்கும் நிறைந்த அசைவற்ற ஒன்றை ஜைநமும் ஏற்கிறது; சைவமும் ஏற்கிறது. ஜைநம் அசைவற்ற ஒன்றிற்கு ஐந்தொழில் கூறுவதில்லை. சைவம் பரம்பொருளுக்கு இருநிலை வகுத்து, ஒன்றற்கு ஐந்தொழிலின்மையும், மற்றதற்குத் தொழிலுண்மையுங் கூறுகிறது. அவ்விருநிலை சொரூபம் தடத்தம் என்பன. பொரூப சிவத்துக்கு ஒன்றுமில்லை. “சிவனரு வுருவுமல்லன் சித்தினோட சித்துமல்லன் – பவமுதற் றெழில்களொன்றும் பண்ணிடுவரனுமல்லன்” (சைவ சாத்திரம்). தடத்த சிவத்துக்கு ஐந்தொழிலுண்டு.
தடத்த சிவத்தைப் “பொறிவாயில் ஐந்தவி ஆதிபகவனாகக் கோடலாகாதோ வெனில், சைவ சாத்திர முறைப்படி கோடலாகா தென்க. பிறவியெடுத்தல், பொறிவாயில் ஐந்து பெறல், பின்னே அவைகளை அவித்தல் முதலியன பசு விலக்கண மெனச் சைவ சாத்திரஞ் சாற்றுகிறது. தடத்த சிவத்தையும் பசு வர்க்கத்தில் சைவ சாத்திரஞ் சேர்த்ததில்லை. ஆதலால் திருவள்ளுவர் வழுத்திய ஆதிபகவனைத் தடத்த சிவமாகக் கோடற்கு மிடமில்லை யென்க. கடவுளியலில் ஜைநமும் சைவமும் பிரியுமிடமிதுவாகும்.”
இவ்வாறு அகத் தன்மையில் பார்த்தாலும் மேற்சொன்ன சொற்றொடர்கள் சமண சமயத்திற்கு இயைந்தேயிருக்கின்றன!. என்னை?
பொறிவாயில் ஐந்தவித்தான் சிவனை, திருமாலைக் குறிக்கும் என்று வாதிட்டு போர்த்துறை நண்ணுவது மடமையாம். என்னை?
கடவுள் வாழ்த்தில் கூறப்பட்டுள்ள சொற்றொடர்கள் மனிதனாகப் பிறந்து, பின்னை இறைவனாக உயர்ந்த ஆன்மாவைக் குறித்தே சொல்கிறதேயன்றி எல்லாம் வல்ல பெரும்பொருளை அவைகள் குறிக்காது.
(ஆசிரியர், தன் பேச்சைச் சிறிது நிறுத்துகிறார்)
மாணவன்: ஆகா, நீண்ட விளக்கத்திற்கு நன்றி ஐயா! தற்போது முழுக்குறளையும் விளக்க வேண்டுகிறேன்?
ஆசிரியர்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”.
இதில் ஒன்றை நுணுகியாராய்ந்துப் பார்த்தல் நன்றமையும் தம்பி.
குறளாசிரியர் ”இறைவன் புகழ் புரிந்தார் மாட்டு”, அதாவது “இறைவனுடைய கீர்த்தியை விரும்பினவரிடத்து” என இறைவனது கீர்த்தியைச் சொல்லாமல், இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார்” என விதந்துக் கூறுவதினால், இறைவனால் அருளப்பட்ட அறத்தை விரும்பினவரிடத்து (அவர் வழி சென்றவரிடத்து)காதி, அகாதி வினைகளான இருவினையும் சேராது என்பது அக்குறளின் கருத்து.
இவற்றை ஒட்டியே யசோதர காவியம்,
“இருள்புரி வினைகள் சேரா இறைவன் அறத்தை எய்தின்..”
என்றும்,
“இருள்புரி உலகஞ் சேரா வியநெறி பயந்த பெம்மான்
பொருள்புரி விழவு காண்பார் புண்ணிய உலகங் காண்பார்”
என்றும் வருவதைக் காணலாம்.
மாணவன்: அற்புதமான விளக்கம். நேரம் ஆகிவிட்டதால் பிறிதொரு நாளில்
மீண்டும் உரையாடுவோம் ஐயா!
ஆசிரியர்: நன்று தம்பி. அப்படியே ஆகட்டும். சென்று வா!
(மாணவன் விடைபெற்று வீடு திரும்புகிறான்)
தொடரும்…
இரா.பானுகுமார்,
சென்னை
Sunday, January 16, 2011
இருவினை சேரா இறைவன் - 2
Saturday, November 06, 2010
இருவினை சேரா இறைவன்
இருவினை சேரா இறைவன்!
(தமிழ் ஆசிரியரும், அவரது மாணாக்கரும் உரையாடுவது போல் இக்கட்டுரை அமைகிறது.)
(ஒரு ஞாயிறு காலை நேரம்)
மாணவன்: ஐயா, காலை வணக்கம்!
ஆசிரியர்: காலை வணக்கம். என்ன இவ்வளவு தூரம் தம்பி?
மாணவன்: ஐயா, தங்களிடம் உரையாடலாம் என்று வந்தேன். இன்று விடுமுறையாதலால் தங்களிடம் சில சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் நினைத்தேன். தங்களிடம் முன்னேமே சொல்லாமல் வந்ததற்கு மன்னிக்கவும்.
ஆசிரியர்: பரவாயில்லை தம்பி. இன்று எனக்கு முக்கியமான வேலை எதுவுமில்லை. சரி! உன் சந்தேகங்களைக் கேள்?
மாணவன்: திருக்குறள் படித்துக் கொண்டிருந்தேன். கடவுள் வாழ்த்தில் வரும் ”இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்” என்ற சொற்றொடர் எனக்கு விளங்கவில்லை. எல்லாம் வல்ல இறைவனுக்கு வினைகள் எப்படியிருக்க முடியும்? சிவபெருமான், பிறவாயாக்கை பெரியவன் என்று படித்திருக்கிறேன். ஆனால், திருவள்ளுவர் இருவினை சேரா இறைவன் என்கிறார்? நீங்கள் தான் விளக்க வேண்டும் ஐயா?
ஆசிரியர்: தம்பி, அந்த குறளின் பொருள் புரியவேண்டும் என்றால் வினைப் பற்றி நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
மாணவன்: வினையா? தாங்கள் ஊழ்வினையைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!
ஆசிரியர்: நீ நினைப்பது சரிதான். முதலில் இந்தப் பாட்டைக் கேள்!
“பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு”1
நாலடி என்ன சொல்கிறது?
ஒரு கன்றுக்குட்டி பல பசுக்கள் உள்ள கூட்டத்தில் தன் தாய் பசுவைத் தேடி எவ்வாறு சென்றறடைகிறதோ அதுபோல ஒருவன் செய்த வினைகள் அவன் பல பிறப்பெடுத்தாலும் அவனை சென்றடையும். வினை செய்தவன் அவ்வினைப் பயனை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பாடம்.
மாணவன் குறுக்கிட்டு: இதனால் தான், திருவள்ளுவர், “பிறர்க் இன்னா முறபகல் செய்யின் தமக் இன்னா பிற்பகல் தாமே வரும்”2 என்றது இதனால் தானோ?
அப்படி என்றால் நாம் அவ்வினைப் பயனிலிருந்து தப்பிக்க முடியாதா? சம்பந்தர் தன் தேவாரத்தில் “நாளும், கோளும் என்ன செய்யும்” நம்பிரான் இருக்கையிலே”3 என்று சொல்கிறாரே?
ஆசிரியர்: அவசரப்படாதே தம்பி. நான் இன்னும் முடிக்கவில்லை. பிறப்பு என்பது சக்கரம் போன்றது. வினை என்ற மாசு விடுபடும் வரை பிறவிச் சுழற்சி நிற்பதில்லை. நமக்கு நடக்கும் நல்லது, கெட்டது எல்லாம் நம் வினைப் பயன்களேக் காரணம். நமக்கு நடக்கும் நன்மைகளுக்கு நம் நல்வினையும், தீமைகளுக்கு தீவினையும் காரணங்களாக அமைகின்றன. இதனால் நல்வினை, தீயவினை என்ற இரண்டு வினைகள் இருப்பது தெரியவரும். இதனால் தேவர் பெருமான் இருவினை என்றார்.
மாணவன்: ஏதோ தத்துவக் கோட்பாடுபோல் தெரிகிறதே? இது எந்த சமயக் கோட்பாடு? சைவமா? வைணவமா?
ஆசிரியர்: (சிரித்தபடியே) நன்று கேட்டாய் தம்பி. இது வைணவமோ, சைவமோ அல்ல. இது சமணக் கோட்பாடு!
மாணவன்: (ஆச்சரியமாக) சமணமா? மயிலை.சீனி.வேங்கடசாமி, திரு.வி.க போன்றவர்கள் குறள் சமணச் சார்புடையது என்கிறார்களே? இதனால் தானோ?
ஆசிரியர்: இருக்கலாம். ஆனால் நாம் அவர்கள் சொல்வதை இங்கு கருத்தில் கொள்ளவேண்டாம். நாமே விளங்கிக் கொள்ளப் பார்ப்போம்!
மாணவன்: ஆனால், சைவத்திலும் வினைக்கோட்பாடுண்டே?
ஆசிரியர்: பொறு! அவசரப்படாதே! சைவத்திலும் வினைப்பற்றி கூறப்பட்டிருந்தாலும்,சிறப்பாக இது சமணத்திற்கே உரிய கோட்பாடு. சமணம் குன்றியக் காலத்தில் இக்கருத்து சைவத்தில் உள்வாங்கப்பட்டது. தேவாரக் காலத்திற்கு முன் சைவத்தில் வினைக் கோட்பாடு இருந்ததாகச் சான்றுகள் இல்லை. பதின்மூன்றாம் நூற்றாண்டு வாக்கில்தான் சைவ கோட்பாடுகள் தொகுத்து எழுதப்பட்டன.4
மாணவன்: அப்படியா? சைவம் தேவாரக் காலத்திற்கு முன்னர் இல்லையா?
ஆசிரியர்: நான் அப்படி சொல்லவில்லையே! சிவன் வழிபாடு இருந்திருக்கிறது. ஆனால் அவை முழுச் சமயமாக பரிணமிக்கவில்லை. கோட்பாடுகள், ஆகமங்கள், வழிபாடு போன்ற கூறுகள் கொண்ட அமைப்பைத் தான் சமயம் என்று கொள்ள முடியும்! இல்லையா?
மேலும், வினைக்கொள்கையில், சைவத்திற்கும், சமணத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. சைவத்தில் சிவபெருமான் தன் ஆணையால் உயிர்களின் வினைப்பயனுக்கு ஏற்ப பிறவி பேதத்தை தருவான் என நம்பப்படுகிறது.5
ஆனால் இதற்கு மாறாக, சமணத்தில் வினைகளை மட்டுறுத்தவென்று யாரும் தேவையில்லை. வினைப்பயன், செய்தவனைத் தானே சென்றடையும். மேலே சொன்ன நாலடியார் பாடல் கூறுவதும் அதுதான். தேவர் பெருமானும் “பிற்பகல் தாமே” என்று கூறுவதால், இங்கே கூறப்படுவதுச் சமண கோட்பாடாகிறது. என்ன புரிகிறதா?
மாணவன்: புரிந்த மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது.
((இருவரும் சிரிக்கிறார்கள்)
ஐயா! என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இருள்சேர் என்று எதனால்?
ஆசிரியர்: நல்வினை, தீவினை பிறப்பிற்கு வித்தாகும். நால்வகை பிறப்புக்கு வழிவகுக்கும். நல்வினைப் பயனால் மனிதப் பிறப்பும், நல்ல குடியும், தேவகதியும், தீவினைப் பயனால் மிருககதியும், நரககதியும் அமையும். பிறப்பறுக்க இந்த இரண்டு வினைகளையும் நீக்க வேண்டும். இவை இரண்டும் பிறப்பிற்கு காரணமாக அமைவதால் தேவர் பெருமான் “இருள்சேர் இருவினை” என்றார்.
”தீவினை, நல்வினை என்று கூறப்படும் இரண்டு வினைகளும் சேராது, மெய்ப் பொருளாய் விளங்கும் இறைவன் புகழை விரும்பிப் போற்றுபவர்களுக்கு.” என்பது அக்குறளின் கருத்து.
மாணவன்: ஐயா, இந்த இடத்தில் ஒரு கேள்வி. இறைவன் புகழைப் போற்றுபவர்களுக்கு இருவினைகளும் சேராது என்றால்? அதா இறைவன் நாமத்தை துதித்து வந்தால் வினைகள் சேராது என்று பொருள் கொள்ளலாமா?
ஆசிரியர்: தம்பி, மேலோட்டமாய்ப் பார்த்தால் அவ்வாறு பொருள் கொள்ளலாம். திருக்குறள் உலகோர் எல்லாருக்கும் பொது. ஒரு சாராருக்கு மட்டும் குறள் எழுதப்படவில்லை. குறளாசிரியர் சமணராகயிருந்தாலும் எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில்தான் குறள் யாத்திருக்கிறார்.
“வென்றான் வினையின் தொகையாகி விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின் ஒழியாது முற்றும்
சென்றான் திகழும்சுடர் சூழோளி மூர்த்தி யாகி
நின்றான் அடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்”6
”அடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்” என்பதனால் இறைவனை வணங்கினாலே வினை நீங்கிவிடும் என்று பொருள் கொள்ளமுடியுமா?
”இறைவன் புகழைப் பாடுகின்றவர்கள், இவ்வாறு எல்லாக் கர்மங்களையும் கெடுத்து, ஆன்மாவின் முழுமையான தூய தன்மையை இறுதியில் அடைகின்றனர். சமண சமயக் கருத்துப்படி இவ்வுலக நன்மைகளைப் பெறுவது இறைவனை வணங்குவோரின் கொள்கையன்று. ஆனால், ஆன்மாவின் இயல்பான தூய்மை நிலையைப் பெற்று, தான் வணங்கும் இறைவனைப் போலவே ஆக வேண்டும் என்பதைத்தான் சமண சமயம் வற்புறுத்துகிறது. சமணம் வற்புறுத்தும் இந்தச் சமய நெறி முறை உலகெங்கும் காணப்படும் சமய கண்ணோட்டங்களில் இருந்து வேறுபாடு உடையதாக இருக்கிறது.
ஒருவன் இறைவன் மூலம் அடையும் நன்மைகளுக்குப் பிரதிபலனாகப் படையல்கள் (காணிக்கைகள்) உருவில் அக்கடவுளுக்கு அளிக்கப்படும் வணக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. மற்ற உலக சமயங்களின் கண்ணோட்டம் (அதாவது, கடவுள் அருளும் வரங்கள் மூலம் ஒருவன் நன்மையைப் பெறுகிறான், அவ்வாறு பெறும் நன்மைக்குப் பிரதி உபகாரமாக (கைம்மாறு) அவன் படையல்கள் மூலம் வணங்குகிறான்)
இறைவனிடம் இருந்து ஒன்றைப் பெற்று, அதற்கு ஈடாக வேறொன்றைக் காணிக்கை மூலம் அவருக்குத் திருப்பித் தரும் வாணிக பேரம் (அறவிலை) போல் தோன்றும் இந்தக் கருத்தைச் சமண சமயம் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால் விலக்க வேண்டிய மூன்று மூட நம்பிக்கைகளில் (தேவ மூடம், பாஷாண்ட மூடம், உலக மூடம்) இதுவும் ஒன்று. இறைவன் என்று வணங்கப்படும் மெய்ப் பொருள், ஒருவர் தம் ஆன்மாவை உயர்த்திக் கொள்ள – தம் பண்பில் மேம்பாடு அடைய வேண்டிய குறிக்கோளாக இருக்க வேண்டுமேயன்றி, வணங்குபவர் (பக்தர்) பேரம் பேசுபவராக இருக்கக் கூடாது. இதுவே சமணரின் கடவுட் கொள்கை; வழிப்பாட்டின் நோக்கம்”7
என்று சமண அறிஞர், பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன் கூறுவதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம்.
மாணவன்: ஐயா! தங்கள் விளக்கம் என் மனக் கண்ணை திறந்திருக்கிறது. இறைவன் பற்றிய புரிதல் இன்னும் ஆழமாகிறது. திருப்பதியில் ஏன் அவ்வளவுக் கூட்டம்?
ஆசிரியர்: இது அவர்களின் நம்பிக்கை. இதை நாம் குறைக் கூறுதல் ஆகாது. நம் நம்பிக்கை நம்வரையில் இருக்கவேண்டும்.
மாணவன்: ஐயா, இருவினைப் பற்றி சமண இலக்கியங்களில் இருந்து மேலும் விளக்க முடியுமா?
ஆசிரியர்: குறள் கடவுள் வாழ்த்தில் வரும் சொற்றொடர்களும், கருத்துகளும் மற்ற சமய இலக்கியங்களைவிட சமண இலக்கியங்களில் பெரிதும் பயின்று வருகிறது. அவ்வளவையும் இங்கு கூற ஒரு நாள் போதாது, ஆகையால் சிலவற்றை மற்றும் இங்கு கூறுகிறேன்.
“அருள்புரி மனத்த ராகி யாருயிர்க் கபய
நல்கிப் பொருள்கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின்
மருள்செய வருவ துண்டோ வானவ ரின்ப மல்லால்”8
என்றும்,
”ஆதியா யுலகியல்பை யளித்தாய் நீயே
அருந்தவனா யறம்பகர்ந்த அறிவ நீயே
காதியா யுருவினையைக் கடிந்தாய் நீயே
……………”9
என்றும் வருவதைப் பார்க்கலாம்.
மேலும், திருக்கலம்பகம், சிந்தாமணி, பெருங்கதை போன்ற சமண இலக்கியங்களில் இருந்து சான்றுகள் காட்டலாம். விரியும் அதனால் இங்கு சொல்லவில்லை.
மாணவன்: நன்றி ஐயா! அருமையான விளக்கங்கள். சமணப் பற்றி அறிய ஆவல் மேலிடுகிறது. ஐயா, நேரம் போனதே தெரியவில்லை. மற்றொரு நாள் சமணம் பற்றி நீங்கள் விளக்கமாக சொல்லவேண்டும். எனக்கு மட்டுமல்லாமல், நிறைய வலைஞர்களுக்கும் அது மிக உதவியாக இருக்கும்.
ஆசிரியர்: நாம் படிக்கும் காலங்களில்,சைவ, வைணவ நூலகள்தான் பெரிதும் கிடைக்கிறது. சமணர்கள் பார்வை (Jaina View) என்ன என்று தெரியாமல் போய்விடுகிறது. தமிழ்ச் சமணரான திரு.இரா.பானுகுமாரின் வலைப்பதிவு சென்றுப் படித்துப் பார். நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொள்ளலாம். மற்றொரு நாளில் சந்திப்போம். வணக்கம்!
To be Continued!
--------------------------------------------------------------------------
1. நாலடியார் – 101
2. திருக்குறள் – 319
3. தேவாரம் - சம்பந்தர் –
4. Facets of Saiva Siddhanta – சைவசித்தாந்தம்” ஓர் அறிமுகம் – முனைவர் நல்லூர் சா.சரவணன். (பக்கம்: 1)
5. ,,, (பக்கம்: 25,26)
6. சூளாமணி – 1 – கடவுள் வாழ்த்து
7. திருக்குறள் சமயம் – பக்கம்:31
8. யசோதர காவியம் – 300ஆம் பாட்டு
9. ஜீவசம்போதனை – 27ஆம் பாட்டு

Sunday, August 22, 2010
தெய்வம் தெளிமின்
தெய்வம் தெளிமின்
தமிழின் ஆதிகாவியம் என்று போற்றப்படுவது சிலப்பதிகாரம். இதன் சிறப்பை அறிந்து, பாரதியார் “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்றார். காவியங்கள் பொதுவாக அரசனைப் பற்றியோ அல்லது தெய்வத்தைப் பற்றியோ அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிலப்பதிகாரம் தமிழின் முதல் காவியமாக மட்டும் திகழாமல், சாதரண நிலை மாந்தர்களை வைத்து எழுந்த முதல் காவியமும் கூட. அதுவும், பெண் மகளை வைத்துப் பாடபட்ட முதல் காவியமுமாகும். ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இதுவும் ஒன்று. இப்பேற்பட்ட காவியத்தை யாத்தவர் இளங்கோவடிகளாவார்.
சிலப்பதிகாரக் காலம்
இதன் காலம் ஸ்திரமாக சொல்ல முடியாவிட்டாலும் பெரும்பாலான அறிஞர்கள் 2ஆம் நூற்றாண்டு என்று கொள்கின்றனர். “தமிழ்க் காவலர்கள்” இன்னும் முன்னம் என்று கொள்வர். இக்கால நிர்ணயம் இங்கு தேவையில்லை யாதலால், கட்டுரையின் தலைப்பை நோக்கிச் செல்வோம். ;-)
இளங்கோவடிகளின் அறிவுரை
சிலப்பதிகாரத்தை முடிக்கும் முன்னர், இக்கதையைப் படித்தவர்களுக்கு சில அறிவுரைகள் சொல்லி அவைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்துகிறார். அப்பாட்டு,
”………………………..
என்திறம் உரைத்த இமையோர் இளங்கொடி
தன்திறம் உரைத்த தகைசால் நன்மொழி
தெரிவுறத் கேட்ட திருத்தகு நல்வீர்” - வரந்தரு காதை (185)
“பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொல் போற்றுமின்
ஊனூண் துறமின் உயிர்க்கொலை நீங்குமின்
தானம் செய்ம்மின் தவம்பல தாங்குமின்” - வரந்தரு காதை (190)
“செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட் பிகழ்மின்
பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் ஓம்புமின்” - வரந்தரு காதை (195)
“அறமனை காமின் அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது” - வரந்தரு காதை (200)
“செல்லும் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”
என் உரை:
இளங்கொடியாளான கண்ணகியின் கதைக் கேட்ட நல்லவர்களே! கேளுங்கள்!!
1. கவலையும், துன்பமும் விட்டு ஒழியுங்கள்,
2. தெய்வம் எது என்று தெளியுங்கள்,
3. அப்படி தெளிந்து ஏற்றுக்கொண்டவர்களை பின்பற்றுங்கள்,
4. பொய் சொல்லாதீர்கள், புறங்கூறுதலை அகற்றுங்கள்,
5. புலால் உணவை விலக்குங்கள்,
6. பிற உயிர்களைக் கொல்லாதீர்கள், (கொல்லாமை கடைப்பிடியுங்கள்),
7. தானம் செய்யுங்கள்,
8. நோன்புகள் பல ஏற்றுக் கொள்ளுங்கள்,
9. பிறர்ச் செய்த உதவிகளை மறக்காதீர்கள்,
10. தீய நட்பை விலக்குங்கள்,
11. பொய்ச் சாட்சி சொல்லாதீர்கள்,
12. உண்மை மொழியினை விட்டு அகலாதீர்கள்,
13. அறவோர்களை நாடி செல்லுங்கள்,
14. அறவோர் அல்லாதவர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள்,
15. பிறர் மனைவியை தாயாக நினையுங்கள்,
16. நிர்கதியாக இருக்கும் உயிர்களைக் காப்பாற்றுங்கள்,
17. இல்லறத்தைப் போற்றுங்கள்,
18. தீயவைகளைச் செய்யாதீர்கள்,
19. குடியை விட்டுவிடுங்கள்,
20. திருடாதீர்கள்,
21. விலைமாதர்களிடம் செல்லாதீர்கள்,
22. பொய் பேசாதீர்கள்,
23. பயனற்ற பேச்சுகளை பேசாதீர்கள்,
24. இளமை நிலைக்காது,
25. செல்வம் நிலைக்காது,
26. உடம்பும் நிலைக்காது
ஆயுட் காலம் எப்போது முடியும் என்று தெரியாது, மரணமும் தவிர்க்க முடியாதது, அறம் ஒன்றே உய்விக்கும்! அறமே மறுமைக்கும் துணையாக பின் வரும். ஆதலின் அறம் செய்து வாழ்வாங்கு வாழுங்கள்!!
என்று தன் காவியத்தை முடிக்கிறார். மேற்சொன்ன அனைத்து அறிவுரையும் அப்படியே திருக்குறளில் எதிர் ஒலிப்பதையும் ஈண்டு நோக்குக!
தெளிமின்! தெளிந்தோர்ப் பேணுமின்!!
..” தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின்”
இந்த வரியில் இளங்கோவடிகளின் உள்ளக் கிடக்கை தெற்றென விளங்குகிறது. என் காவியத்தில், பல கடவுள்களை கூறியிருக்கிறேன், அவர்களில் உண்மையான தெய்வம் யார் என்று தெளியுங்கள். அப்படி உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களை (தெளிந்தவர்களை) கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
அப்படி இளங்கோவடிகளில் நிறைந்த அந்த தெய்வம் யார்? இளங்கோ தன் காவியத்தில் ஒரு யுக்தியை கையாள்கிறார். கதையில் நிறைய மாந்தர்களை உலவ விட்டிருந்தாலும், தன் மனதில் பிரதிப்பளிப்பாக, கவுந்தியடிகளின் பத்திரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். கவுந்தியடிகள் கதாப்பாத்திரத்தை எடுத்துவிட்டுப் பார்த்தாலும், கதைக்கு எந்த பங்கமும் வராது. பின் ஏன் அந்தக் கதாப்பாத்திரம்? தன் சமயக் கொள்கையை கதையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் கவுந்தி என்றப் பாத்திரத்தைப் படைத்துக் கதையை நகர்த்திச் செல்கிறார் இளங்கோவடிகள்.
இறைவாழ்த்தில் இயற்கையைப் பாடியவர், தன் உள்ளக்கிடக்கை சரியான நேரத்தில் கவுந்தியின் மூலமாக உள் நுழைக்கிறார்.
மதுரைக் காண்டம், காடுகாண் காதையில்,
“திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்” – (5)
என்று அருகப் பெருமானை வணங்கி, பின் கவுந்தியின் மூலமாக சமணக் கருத்துகளை ஆங்காங்கே தூவிச் செல்கிறார் இளங்கோவடிகள். அத்தொடு அல்லாமல் அப்பிராட்டியின் வாயிலாக,
“..ஒரு மூன் றவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா”
என்றும்,
“காமனை வென்றோன் ஆயிரத் தெட்டு
நாமம் அல்லது நவிலா தென்னா
ஐவரை வென்றோன் அடிஇணை அல்லது
கைவரக் காணினும் காணா என்கண்
அருளறம் பூண்டோன் திருமெய்க்கு அல்லதென்”
என்றும்,
“பொருளில் யாக்கை பூமியில் பொருந்தாது
அருகர் அறவம் அறிவோற் கல்லதென்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதென்
தலைமிசை உச்சி தானணிப் பொறா அது”
என்றும்,
“இறுதியில் இன்பத் திறைமொழிக் கல்லது
மறுதர ஓதியென் மனம்புடை பெயராது”
என்று கூறுவதையும் ஈண்டு நோக்குக.
இதனால் சிலப்பதிகார ஆசிரியர் உள்ளம் யாது என்றும் அவர் எந்த தெய்வத்தை தெளிந்திருக்கிறார் என்றும் நாம் உணரலாம். அவரின் வாக்கை நாமும் பின்பற்றி,
”ஆதியில் தோற்றத்து பகவனை, மலர்மிசை நடந்த மன்னவனை, அறவாழி ஏந்திய அந்தணனை, எண்குணத்தானை, வாலறிவனை” வணங்கி ஏத்துவோமாக!
தெய்வம் தெளிமின்!!
அறம் மறவற்க! அறமல்லது துணையில்லை!!
வாழ்க திருவறம்! வளர்க நல்லறம்!!
இரா.பா

Labels:
Jainism,
Silapathikaram,
இளங்கோவடிகள்,
சமணம்,
சிலப்பதிகாரம்,
திருக்குறள்
Sunday, August 08, 2010
ஆதிபகவன்
ஆதிபகவன்
மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன் ஆகிய கட்டுரைகள் எழுதும் போதே சில நண்பர்கள் முதல் குறளைப் பற்றியும் எழுதச் சொன்னார்கள். திரு.மஞ்சை வசந்தன் என்பார் முதல் குறளுக்கு எழுதியக் கட்டுரையை இங்கிட்டு என் கருத்தைப் பின்னர் எழுதுகிறேன் என்று சொன்னதோடு சரி. எழுதச் சந்தர்ப்பம் அமையவில்லை.
ஆனால், சமீபத்தில் மின்தமிழ்க் குழுமத்தில் ஆதிபகவன் பற்றிய இழையொன்றில் இரண்டு அறிஞர்களின் 1930ல் எழுதியக் கட்டுரையைக் கொடுத்திருந்தேன். எல்லா குழுமங்களில் நடப்பது போலதான் இங்கும் நடந்தது. இரசத்தை (சாரத்தை) விட்டு சக்கையைப் பிடித்தார் போல் “நடந்தவன்”, ”சென்றவன்” என்பதற்கு மேலே ஏதும் விளங்கிக்க முடியவில்லை. பொதுவாக, குழுமங்களில், அறிவுக்கு (மூளை) பதில் உணர்ச்சிக்கு (இதயம்) இடம் கொடுக்கப்படுகின்றபடியால் அங்கு மேலும் எழுதுவதில் பயனில்லை என்பதால் இங்கு எழுதும் படியாயிற்று! :-)
இங்கு எழுதுவதால், ஒரு செளகரியம்! சிலர் நேரடையாக பின்னூட்டுக் கொடுத்து மனதில் பட்டதை எழுதுவார்கள். இன்னும் சிலர், கட்டுரைப் படித்தக் கையோடு தனி மடலில் தங்கள் சந்தேகங்களை விளக்கச் சொல்வார்கள். இதனால் புரிதல் விரிவடையும். எனக்கும்தான்!! ;-)
அறிஞர்கள் பட்டியல்!
எனக்கு தெரிந்து தமிழ் இலக்கிய உலகில் சில நூற்றாண்டுகளாக ஆராயப்பட்டு வரும் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். குறளாசிரியர் யாரை தன் இறைவனாக ஏற்கிறார் அல்லது அவர் குறிப்பிடும் அந்த இறைவன் யார் என்ற கேள்வி பல காலமாக நிறைய அறிஞர்களில் மனதில் அரித்துக் கொண்டு வந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது!
பல அறிஞர்கள் அவற்றிற்கு விடைத்தேடி, நடு நோக்கோடு, திருக்குறள் சமணம் சார்ந்தது என்று ஆய்ந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் சில அறிஞர்கள் சமண கருத்துக்கள் (அறன் வலியுறுத்தல், கொல்லாமை, புலால் மறுத்தல்) திருக்குறளில் காணப்பட்டாலும், குறளாசிரியர் சமணர் அல்லர் என்று எழுதியிருக்கிறார்கள். குறளாசிரியர் சமணர் என்று கூறும் அறிஞர்கள் பட்டியலை கீழேக் கொடுத்துள்ளேன். இவர்கள் யாரும் சமணரல்லர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
1. தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார்
2. மயிலை.சீனி.வேங்கடசாமி
3. வித்துவான். மே.வீ.வேணுகோபால பிள்ளை
4. திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை
5. பதிப்புசெம்மல். திரு.சண்முகம்பிள்ளை
6. திரு.அ.கி.பரந்தாமனார்
7. பன்மொழிப் புலவர். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
8. பன்மொழிப் புலவர். வெங்கடராஜுலு ரெட்டியார்
9. சர். ஆர்.கே.சண்முகம் செட்டியார்
10. பன்மொழிப் புலவர். மு.கு.ஜகந்நாத ராஜா
11. தில்லையம்பூதூர் திரு.வெங்கட்ராம ஐய்யங்கார்
12. கவிராஜபண்டிதர் ஜெகவீரபாண்டியனார்
13. பிஷப் கால்டுவெல் துரை மகனார்
14. பிரான்சிஸ் வைட் எல்லீஸ் துரை மகனார்
15. காஞ்சி. திரு.டி.ஆர்.சீனிவாச்சாரியார்
16. மழபாடி. மகாலிங்க ஐயர்
17. திரு. ஐராவதம்.மகாதேவன்
18. திரு. க.ந.சுப்ரமணியம்
19. கல்வெட்டறிஞர். திரு.செ.இராசு
20. பேரா. க.நாச்சிமுத்து
21. திரு. சிவ.விவேகானந்தன்
22. முனைவர். துளசி.இராமசாமி
23. திரு. மறைந்த எழுத்தாளர் சுஜாதா
24. புலவர். கவிகோ.அப்துல் ரஹ்மான்
25. பேரா. ஏகாம்பர நாதன்
26. நாசா. விஞ்ஞானி. நா. கணேசன்
27. பேரா. சந்தரசேகர்
28. திரு. ஜெயமோகன்
29. திரு. மஞ்சை வசந்தன்
30. திரு. அருணன்
31. திரு. பேரறிஞர். அண்ணாதுரை
32. திரு. கே.என். நீலகண்ட சாஸ்திரி
33. பேராசிரியர். க. பூர்ணச்சந்திரன்
34. பேரா.கார்த்திகேசு சிவதம்பி
35. பேரா.தொ.பரமசிவன்
36. பேரா.கைலாசபதி
37. கல்வெட்டறிஞர் திரு.எஸ்.இராமச்சந்திரன்
38. பேரா.கமில் சுவலபில் (Kamil Vaclav Zvelebil)
39.
பட்டியல் வளரும் …………………………..
இனி, கட்டுரைக்குள் செல்வோம்?
அகர முதல எழுத்தேல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு – திருக்குறள் (1)
விளக்கம்:
உலகம், அகரம் முதலான எழுத்துக்களை எல்லாம் ஆதிபகவனை முதலாகக் கொண்டுள்ளது.
விரிவுரை:
அகர முதல - அகரத்தை முதலாகத் தொடங்கி வரும், எழுத்துக்கள் என்று பொதுப்பட சொல்லினும், எண்களையும் அவை குறிக்குமாதலின் எழுத்தேல்லாம் என்றார், ஆதிபகவன் - ஆதியங் கடவுள், முதல் கடவுள் , முதற்றே உலகு - உலகின் கண் ஆதி பகவனிடம் இருந்து தோன்றிற்று.
அஃதாவது, ஆதிபகவனாலேயே எண்ணும், எழுத்தும் இவ்வுலகின் கண் தோன்றியது எனபது கருத்து.
ஆதிபகவன் யார்?
ஆதி என்பதற்கு முதல் என்றும் தொன்மை என்றும் பொருள் படும். முதல் பகவன் என்றும் ஆதியில் தோன்றிய பகவன் என்று பொருள் கொள்ளலாம். ஆயினும், இங்கு ஆதி என்பது முதல் என்றே பொருள் கொள்ள வேண்டும். அ (ரகம்) எழுத்து மற்ற எழுத்துகளுக்கு எல்லாம் முதலாக வரும். ஆதிபகவன் மற்ற பகவர்களுக்கெல்லாம் முதலாக இருக்கிறார். மற்ற பகவர்கள் யாவர்? எனின், சமண சமயத்தில் காலந்தோறும் (இறந்த, நிகழ், வருங்காலம்) இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றுவார்கள் என்றும், அவர்கள் மக்களை நல்வழிப் படுத்தி அறம் புகட்டுவார்கள் என்பதும் சமணர்கள் நம்பிக்கை. அவ்வாறே நிகழ்க் காலத் தீர்த்தங்கரர்கள் இருபத்துநால்வர். அவர்களில் முதலாமவர் இரிஷபதேவர் என்று போற்றப்படும் ஆதி தீர்த்தங்கரர் ஆவார். சமண இலக்கியங்கள் (வடமொழி, தென்மொழி) இவர் திருநாமங்களை இவ்வாறுப் போற்றும்,
ஆதி, ஆதிபகவன், ஆதிநாதர், ஆதிதேவன், ஆதிமுதல்வன், ஆதிமூர்த்தி, ஆதிமூலர், ஆதிபிரம்மா, ஆதிமுதற் கடவுள், ஆதிநாள் அரசர், ஆதீஸ்வரன், ஆதிசக்கரவர்த்தி, ஆதிபட்டாரகர், ஆதிநாயகன், ஆதிஜினன், ஆதிராஜா, ஆதிபரமேஸ்வரன், ஆதித்தீர்த்தன், ஆதியங் கடவுள்
ஆதிபகவன் என்றுப் போற்றப்படும் ரிஷபநாதர், எண்ணையும், எழுத்தையும் முதன்முதல் உலகின் கண் உருவாக்கினார். அவரே கல்விக்கு மூல ஆதாரம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதற்கிணங்க ஆதிநாதர் தன் பெண் பிள்ளைகளுக்கு எண்ணையும், எழுத்தையும் முதல் முதலில் கற்பித்தார். நிகண்டு நூல்களில் தலைச் சிறந்ததாகக் கருதப்படும் சூடாமணி நிகண்டு,
“விருப்புறு பொன்னே யிற்குள் விளங்கவெண் ணெழுத்திரண்டும்
பரப்பிய வாதிமூர்த்தி பங்கயப்பாதம் போற்றி! – (நாலாவது தொகுதி – கடவுள் வணக்கம்)
என்றும்,
ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் என்னும் நூலில்,
“சசிகளாதித்த ரொருகோடி வந்தோருருக்
கொண்டாடி கண்ட பரமனே
சமவசர ணேசனே இமையவர்களீசனே
சார்ந்தவர்க் கைந்தாருவே
இசையினா லெண்ணெழுந் தியம்புவித்தாயுநீ”
என்றும் போற்றப்படுவதை நோக்குக. இதனால் அகரம் முதலிய எண்ணும், எழுத்தும் ஆதிபகவனிடம் இருந்துத் தோன்றியது என்பதைக் காணலாம்.
ஆதிபகவன் என்னும் சொற்றொடர்
ஆதி என்பதற்கு இங்கு முதல் என்பதுதான் பொருந்தும் என்று முன்னமே பார்த்தோம். ஆதிபகவன் என்பது முதல் பகவன் என்று ஆகும். இதனை தமிழ்ச் சமண இலக்கியத்தில் இருந்து சான்றுக் காட்டுவோம்.
“மன்னியபே ருலகனைத்தும்
நின்னுள்ளேநீ யொடுக்கினை
ந்ன்னின்று நீவிரித்தனை
நின்னருளின் நீகாத்தனை-எனவாங்கு
ஆதிபகவனை அருகனை
மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே” – திருக்கலம்பகம்
“ஆதிபகவன் அசோக வசலன்
சேதிபமுதல்வன் சினவரந்தியம் பகன்” – திருப்பாமாலை
“அத்தனே என்னை ஆளீர் சரணம்
ஆதிபகவன் அருளே சரணம்” – தோத்திரத் திரட்டு
”பகவன்” என்பதற்கு அடியாருக்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் கேவல ஞானி என்றே பொருள் உரைத்திருக்கிறார். ”பகவன்” என்ற சொல் பல தமிழ்ச் சமண இலக்கியத்தில் காணலாம். அம்மேற்கோள்களைச் சுட்டினால் விரிவடையும் என்று இங்குக் கொடுக்கப்படவில்லை.
இன்னுமொரு காட்டு. தமிழின் முதல் உரைநடை நூலான சிறீபுராணம் (ஸ்ரீபுராணம்) என்ற நூலில் இருந்துத் தரப்படுகிறது.
முடிபு:
தேவர் பெருமான் (குறளாசிரியர்) “ஆதிபகவன் முதற்றே உலகு” என்றது முதல் சமணத் தீர்த்தங்கரரான “ஆதிநாதரை” என்பது தெள்ளிதில் விளங்கும். அடுத்த குறளான “கற்றதனால் ஆயப் பயன்னென் கொல்” என்ற குறளும் இந்தக் கருத்துக்கு அரண் செய்யும்.
இன்னும்மோற் எடுத்துக்காட்டு கொடுத்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.
சமண முனிவரான “அகளங்க தேவர்” என்னும் பன்மொழிப் புலவர் “தத்வார்த்த சூத்திரம்” என்னும் நூலில் 11ஆம் சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் ஆதி என்னும் சப்தம் அநேகப் பொருள்களையுடைய தெனவும், சில இடங்களில் முதல் என்னும் பொருள் பெற்று வருமென்றும் உரை வரைந்துள்ளார். அதற்கு மேற்கோளாக,
“அகாரா தயோ வர்ணா
ரிஷபா தய்ஸ் தீர்த்தகரா இதி”
என்னும் சுலோகத்தைக் காட்டிப் பின்வருமாறு விரிவுரை எழுதுகிறார்.
“எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன, தீர்த்தங்கரர்கள் ரிஷப தேவரை முதலாக உடையர்” என்பதாகும்.
அவ்வாறே நம் குறளாசிரியரும் அகர வரிசையில் அ முதல் எழுத்தாக வருவதுபோல, பின்வரும் பகவர்களுக்கு (தீர்த்தங்கரர்களுக்கு) ஆதிபகவன் முதலாக உள்ளார் என்று கூறுவதை மேற்சொன்ன எடுத்துக்காட்டுடன் ஒப்புமை நோக்க குறளாசிரியன் உள்ளம் எளிதில் புரியும்.
இரா.பானுகுமார், (இரா.பா)
சென்னை
08.08.2010

ஸ்ரீபுராணம் -
ஆதிபர்வம்
“அன்னைமீர்! நீங்கள்
பாலைகளாகவிருக்கின்றீர்களெனினு ம். சீலவிநயங்களால் பரிணதைகளாக விருக்கின்றீர்கள்; ஈத்ரஸமாகிய
ரூபயெளவனாவஸ்தா சீலாசாரங்கள் வித்தையால் அலங்கிருதமாகில் அன்றோ ஸ்ரேஷ்டமாகும்; ஜன்மபலமாவது
வித்தையே; எஸஸ்ஸினையும், ஸ்ரேயஸ்ஸினையும் தருவது வித்தையே; கருதியவற்றைத்தரும் சிந்தாமணியாவதும்
வித்தையே; தர்மார்த்தகாமங்களுள் சம்பத்பரம்பரையைத் தருவதும் வித்தையே; பந்துவாவதும்.
மித்திரராவதும், சர்வார்த்தங்களையும் சாதிக்கும் தேவதையாவதும் வித்தையே; ஆகையால், நீங்கள்
வித்தையினைக் கைக் கொள்வீர்களாக” என்பனவே.
பகவான் இவ்வாறு
சொல்லி அவர்களை ஆசிர்வாதவசனங்களால் வாழ்த்தித் தமது ஹிருதயகமலத்தெழுந்தருளியிருந்த
ஸ்ருததேவியினை ஸ்வர்ணபட்டகத்தின் மிசை பூஜாபுரஸ்ஸரம் அதிவசிப்பித்து, ஸ்ரீஅஸ்தமிரண்டுனுலும்
ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.
அங்ஙனம் காட்டி
அவருள் பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக்
கொள்ளப்பட்ட மங்களத்தையும், அகராதி ஹகாராந்தமாகிய ஸ்வரம் வியஞ்சனமென்னும் இரண்டு பேதத்தினை
உடைத்தாகியதும், அயோகவாகங்கள் இரண்டாகவுடையதுமாகிய அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது
பிறப்பினையும் உபதேசித்தனர்.
சுந்தரியென்னும்
பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய
கணிதஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடசபரிகர்மங்களையு முபதேசித்தருளினார்.
இங்ஙன ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக
வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது.
சகலசாஸ்திரங்களும் அக்ஷரங்களின்றி நிகழாவாதலின் பிரஜாபதி முந்துற அக்ஷரங்களை, உபதேசித்தருளிப்
பின்னும் இருவருக்கும் வியாகரணமும், சந்தோவிஸ்சித்தியும், அலங்காரமுமாகிய ஸ்பத சாஸ்திரங்களையும்
உபதேசித்தருளினர். அவ்விருவரும் பிரக்ஞாபலத்தால் (புத்திவிசேஷத்தால்) பகவானால் உபதேசிக்கப்பட்ட
சகலவித்தைகளையும் உணர்ந்தனர்.”
முடிபு:
தேவர் பெருமான் (குறளாசிரியர்) “ஆதிபகவன் முதற்றே உலகு” என்றது முதல் சமணத் தீர்த்தங்கரரான “ஆதிநாதரை” என்பது தெள்ளிதில் விளங்கும். அடுத்த குறளான “கற்றதனால் ஆயப் பயன்னென் கொல்” என்ற குறளும் இந்தக் கருத்துக்கு அரண் செய்யும்.
இன்னும்மோற் எடுத்துக்காட்டு கொடுத்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.
சமண முனிவரான “அகளங்க தேவர்” என்னும் பன்மொழிப் புலவர் “தத்வார்த்த சூத்திரம்” என்னும் நூலில் 11ஆம் சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் ஆதி என்னும் சப்தம் அநேகப் பொருள்களையுடைய தெனவும், சில இடங்களில் முதல் என்னும் பொருள் பெற்று வருமென்றும் உரை வரைந்துள்ளார். அதற்கு மேற்கோளாக,
“அகாரா தயோ வர்ணா
ரிஷபா தய்ஸ் தீர்த்தகரா இதி”
என்னும் சுலோகத்தைக் காட்டிப் பின்வருமாறு விரிவுரை எழுதுகிறார்.
“எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன, தீர்த்தங்கரர்கள் ரிஷப தேவரை முதலாக உடையர்” என்பதாகும்.
அவ்வாறே நம் குறளாசிரியரும் அகர வரிசையில் அ முதல் எழுத்தாக வருவதுபோல, பின்வரும் பகவர்களுக்கு (தீர்த்தங்கரர்களுக்கு) ஆதிபகவன் முதலாக உள்ளார் என்று கூறுவதை மேற்சொன்ன எடுத்துக்காட்டுடன் ஒப்புமை நோக்க குறளாசிரியன் உள்ளம் எளிதில் புரியும்.
இரா.பானுகுமார், (இரா.பா)
சென்னை
08.08.2010
Labels:
Adibagvan,
Tamil Jains,
சமணம்,
தமிழ்ச்சமணம்,
திருக்குறள்
Subscribe to:
Posts (Atom)